000 |
: |
nam a22 7a 4500 |
008 |
: |
200206b ii 000 0 tam d |
245 |
: |
_ _ |a கணபதி |
300 |
: |
_ _ |a சைவம் |
340 |
: |
_ _ |a கருங்கல் |
500 |
: |
_ _ |a கருவறைத் திருச்சுற்றின் தென்புறத்தில் அர்த்த மண்டப கோட்டச் சிற்பமாக காட்டப்பட்டுள்ள கணபதி வட்டவடிவமான பீடத்தின் மீது லளிதாசனத்தில் அமர்ந்துள்ளார். கரண்ட மகுடம் தரித்துள்ளார். அகன்ற, திறந்த முறச் செவிகள் உடையவராய் விளங்கும் கணபதி துதிக்கையில் பழம் ஒன்றைக் கொண்டுள்ளார். நான்கு திருக்கைகளில் பின்னிரு கைகளில் அங்குசம், பாசம் கொண்டுள்ளார். முன் இடது உள்ளங்கையில் இருப்பது மாதுளை அல்லது சீதப்பழமாய் இருக்கலாம். முன் வலது கையில் ஒடிந்த தந்தத்தை எழுத்தாணி போன்று பிடித்துள்ளார். கழுத்தில் சரப்பளி எனப்படும் அகன்ற அணி அழகு செய்கின்றது. முப்புரி நூல் இடது தோள் வழியே உடலின் பின்புறம் செல்கிறது. கைகளில தோள்வளை, முன் வளைகளான கங்கணங்கள் அணிந்துள்ளார். வலது காலை குத்திட்டு இடது காலை மடக்கி அமர்ந்துள்ளார். இயல்பான மானிட வடிவாய் உடலமைப்பு காட்டப்பட்டுள்ளது. கணபதியின் இருபுறமும் இரு கணங்கள் தலைவனுக்கு காணிக்கைகளை கொண்டு வருகின்ற நிலையில் அமைந்துள்ளன. கணபதியின் தலைக்கு மேலே குடையும், இருபுறமும் சாமரங்களும் காட்டப்பட்டுள்ளன. |
510 |
: |
_ _ |a ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 . |
520 |
: |
_ _ |a ஆகம விதிப்படி அர்த்தமண்டப தென்புற கோட்டத்தில் கணபதியை அமைப்பது மரபு. முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கணபதி சிற்பம் அதிக அணிகளற்ற எளிய தன்மையில் கலையின் உயர்நளினத்தில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பாகும். |
653 |
: |
_ _ |a திருக்கோடிக்காவல், திருக்கோடிக்கா, திருக்கோடீசுவரர் கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிவன் கோயில், பாடல் பெற்ற தலம், தேவாரத் தலம், கோயில், சைவம், முற்காலச் சோழர், சோழர் கலைப்பாணி, கற்சிற்பங்கள், கல், கருங்கல், சிற்பம், கணபதி, விநாயகர், பிள்ளையார், தனிச் சிற்பங்கள், தேவகோட்டம், தேவகோஷ்டம், விமானம் |
700 |
: |
_ _ |a காந்திராஜன் க.த. |
710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
752 |
: |
_ _ |a திருக்கோடிக்காவல் திருகோடீசுவரர் கோயில் |b திருக்கோடிக்காவல் திருகோடீசுவரர் கோயில் |c திருக்கோடிக்காவல் |d நாகப்பட்டினம் |f மயிலாடுதுறை |
905 |
: |
_ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் |
914 |
: |
_ _ |a 11.049502 |
915 |
: |
_ _ |a 79.512992 |
995 |
: |
_ _ |a TVA_SCL_001370 |
barcode |
: |
TVA_SCL_001370 |
book category |
: |
கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_001370/TVA_SCL_001370_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்-001.jpg |
: |
|
Primary File |
: |
TVA_SCL_001370/TVA_SCL_001370_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்-001.jpg
|